நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலினால் மலேசியா 277 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளது: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி 

கோலாலம்பூர்: 

கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்த ஊழல் சம்பவங்களினால் மலேசியா 277 பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார். 

2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரைக்குமான பொருளியல் வருவாய் தரவுகளின் அடிப்படையில் இந்த இழப்பீடு அனுமானிக்கப்பட்டுள்ளதாக டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார். 

ஊழலினால் 277 பில்லியன் ரிங்கிட் நிதி மலேசியா இழந்துள்ளது. இழந்த கோடிக்கணக்கான பணங்களைக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் ஊழல் நடவடிக்கையினால் நாம் பில்லியன் கணக்கில் பணத்தை இழந்துள்ளோம். 

முன்னதாக, 2024-2028ஆம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு அறிமுக விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset