நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் மரம் சாய்ந்ததில் ஒருவர் மரணம் சம்பவம்; மற்றொருவர் காயம்

கோலாலம்பூர்: 

பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் மரம் வோரோடு சாய்ந்து மோனோரயில் தண்டவாளம், சுற்றியுள்ள வாகனங்கள் மீது விழுந்ததில் ஒருவர் மரணமடைந்த நிலையில் மற்றொருவர் காயமடைந்துள்ளார். 

விழுந்த மரத்தில் சிக்கிய இரண்டு பாதிக்கப்பட்டவர்களைப் பணியாளர்கள் மீட்டதாகவும் அவர்களில் ஒருவர் இறந்ததைச்  சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவத்தில் 47 வயதுடைய ஆடவர் மரணமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட ம26 வயதுடையவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் 17 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தியணைப்பு நடவடிக்கையின் உதவி நடவடிக்கை இயக்குனர் ஃபத்தா அமீன் தெரிவித்தார்.

மதியம் 2.19 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்துத் தங்கள் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்கு தீயணைப்பு நிலையங்களின் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். 

கோலாலம்பூர் ஹங் துவா மற்றும் மேடான் துவாங்கு நிலையங்களுக்கு இடையிலான அனைத்து மோனோ ரயில் சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்று ராபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset