நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வினோசினி மின்சாரம் தாக்கி இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: யுயுஎம்

கோலாலம்பூர்:

மாணவி வினோசினி மின்சாரம் தாக்கி இறந்தார் என்பதற்கு  எந்த ஆதாரமும் இல்லை என வட மலேசியா பல்கலைக்கழகம்  கூறியது.

கடந்த 2022ஆம் ஆண்டு சின்தோக்கில் உள்ள பல்கலைக்கழக தங்கும் விடுதியின் அம்மாணவி இறந்து கிடந்தார்.

மரணமடைந்த மாணவியின் தந்தை 3.05 மில்லியன் ரிங்கிடகோரி பல்கலைக்கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் பல்கலைக்கழகம் தனது தற்காப்பு அறிக்கையில்,

மாணவி வினோசினி மாரடைப்புக்கு வித்திடும் ஃபைப்ரோஸிஸால் மியோகார்டியத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் மின்சாரம் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இதனை போலீசாரின் சவபரிசோதனை அறிக்கையும் எரிசக்தி வாரியத்தின் அறிக்கையும் குறிக்கிறது.

சிவில் நீதிமன்றத்தில் வட மலேசியா பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் இது கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset