நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரட்டை 5ஜி இணையச் சேவை குறித்து அடுத்த வாரம் கூட்டம் நடத்தப்படும்: ஃபஹ்மி பட்சில்

சைபர்ஜெயா: 

மாதிரி இரட்டை 5ஜி இணைய சேவை குறித்த கூட்டம் அடுத்த வாரத்திற்குள் நடைபெறும் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

5ஜி தொடர்பான கூட்டு பணிக்குழுவை கூட்டுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இந்த விஷயத்தில் சில விவாதங்கள் நடைபெறும் என்றும் ஃபஹ்மி கூறினார்.

முதலில் கூட்டத்தைக் கூட்டி தற்போதைய நிலைமையை மதிப்பிட வேண்டும். 

அடுத்த வாரத்திற்குள் கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் என்று அவர்  கூறினார்.

நிதி அமைச்சகம் மற்றும் இலக்கவியல் அமைச்சகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து இரட்டை 5ஜி இணைய சேவை குறித்து விவாதிப்பதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset