நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் ரமலான் சந்தைகளில் 73 மெட்ரிக் டன்கள் அதிகப்படியான உணவுக் கழிவுகள் சேகரிப்பு

சைபர் ஜெயா:

இந்தாண்டு ரம்லா மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சிலாங்கூரிலுள்ள ஏழு ஊராட்சி மன்றங்களில் நடந்த 10,854 ரமலான் சந்தைகளில் 73 மெட்ரிக் டன்கள் அதிகப்படியான உணவுக் கழிவுகளை சேகரித்துள்ளதாகக் கழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, உணவுக் கழிவுகள் அளவு குறையவில்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முஹம்மத் தாஹிர் கூறினார்.

ரமலான் சந்தைகளில் இன்னும் உணவுப் பொருட்கள் கொட்டப்படுவதைக் கண்டறிந்ததாகக் கூறினார். 

2023-ம் ஆண்டில், ரமலான் சந்தைகளில் 73.67 மெட்ரிக் டன் குப்பைச் சேகரிக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமைப்பதற்கு முன் சாத்தியமான விற்பனையை மதிப்பிடுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் ரம்லி அறிவுறுத்தினார்.

எனவே MySaves Food திட்டத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன்.

தேவைப்படுபவர்களுக்கு உணவை வழங்குவதன் மூலம் அவை வீணடிக்கப் படுவது தடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset