நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமயத்தை அவமதிப்பதா ? சர்ச்சைக்குரிய மதப்போதகருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்; இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் 

கோலாலம்பூர்: 

இஸ்லாம் அல்லாத பிற சமயத்தை இழிவாக பேசும்  சர்ச்சைக்குரிய மதப்போகர்களுக்கு எதிராக உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

குறிப்பாக, இந்து சமயத்தை இழிவாக பேசி நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களையும் புண்படுத்திய மதப்போதகர் ஸம்ரி வினோத்திற்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் கூறினார். 

இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரும் மடானி அரசாங்கமும் சர்ச்சைக்குரிய மதப்போதகருக்கு எதிராக நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். இதனையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையில் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

முன்னதாக, சிவலிங்கம் வழிபாடு தொடர்பாக ஸம்ரி வினோத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக டிக்டாக் காணொளிகளில் பெரும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset