நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தையில் உணவு விலை உயர்வுக்கு SST காரணம் அல்ல: பிரதமர் 

கோலாலம்பூர்:

ரமலான் சந்தை தளம், உணவு விலை உயர்வுக்கு எஸ்எஸ்டி சேவை வரி ஆறில் இருந்து 8 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது காரணம் இல்லை. மாறாக உள்ளூர் மாநகர் மன்றங்கள் விலைகளை உயர்த்தியது தான் காரணம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ரமலான் சந்தை வர்த்தகர்களிடம் இருந்து அதிகமான கட்டணத்தை வசூலிக்க வேண்டாம்.

இந்த நாட்டில் மாநகர், நகராண்மை கழக அதிகாரிகள் ரமலான் சந்தை வியாபாரிகள் மீது அதிக வாடகையை சுமத்துவதற்கு எந்த காரணமும் இல்லை.

விலை உயர்வில் ஒரு சிறிய தாக்கம் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் ரமலான்  சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு  எஸ்எஸ்டி அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான்கைந்து இடங்களில் ரமலான் சந்தையை என்னால் நேரடியாக  பார்க்க முடிந்தது.

அங்கு முதலில் எழுந்த பிரச்சினை சந்தை இடத்தின் கட்டணம் அதிகரிப்பு தான்.

எனவே வியாபாரிகளுக்கு கட்டணத்தில் அழுத்தம் கொடுக்கக் கூடாது என அரசு வலியுறுத்தியுள்ளது.

கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியூடின் ஹசான் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset