நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு

கார்கில்: 

லடாக்குக்கு மாநில அந்தஸ்து, இமால சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரியும் 3 IDIOTS உண்மை நாயகனான சோனம் வாங்சுக் 20 நாள்களுக்கு மேலாக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும், ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக புதிய தொழில்நுட்ப சாதனங்களை வழங்குபவருமான சோனம் வாங்சுக் மார்ச் 6-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடிக்கு மேல் உள்ள மலையில், மைனஸ் டிகிரி குளிரில் அவர் மேற்கொண்டு வரும் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை அவரது போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு கார்கிலில் கார்கில் மக்களாட்சி கூட்டணி ஆதரவு தெரிவித்து  3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கார்கிலில் உள்ள ஹுசைனி பூங்காவில் கார்கில் மக்களாட்சி கூட்டணியைச் சேர்ந்தவர்களுடன் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

லடாக்குக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயாட்சியை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும், உள்ளுர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லடாக் சார்பில் மாநிலங்களவையில் ஓரிடம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டத்தை கார்கில் மக்களாட்சி கூட்டணி நடத்தி வருகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset