நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாளை முன்னிட்டு பேராவில் பட்டாசு விற்க   217 நபர்களுக்கு அனுமதி

ஈப்போ:

பேராவில் ஹாரி ரயா பெருநாள் கொண்டாட்டத்திற்கு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட்ட 443 நபர்களில் 217 நபர்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பேரா போலீஸ்  தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

விண்ணப்பதாரர் குற்றப் பின்னணி கொண்டவர்களா என்பது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்று அவர் நேற்று மாநில போலீஸ் தலைமையகத்தில்  நடைபெற்ற 217ஆவது போலீஸ் தின நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் கூறினார்.

பட்டாசு விண்ணப்பங்களில் மீதமுள்ள 225 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அவை விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அனுமதியின்றி பட்டாசு, பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க, காவல்துறை அவ்வப்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தும் என்றார்.

மேலும் பேசிய அவர், நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை துடைத்தொழிக்க போலீசார் தங்களின் சேவை வழங்கி வந்த போதிலும் அதற்கு பொது மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கவேண்டும் என்று  டத்தோஸ்ரீ் முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி வலியுறுத்தினார்

பேரா மாநிலத்தில் போலீசார் தங்களின் சேவை சிறந்த முறையில் ஆற்றி வருகிறார்கள்.

போலீசார் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைக்கு பொது மக்கள் வழங்கிய ஆதரவினால் குற்றச்செயல்களை முறியடிக்க முடிந்ததாக தெரிவித்தார்

இந்த நிகழ்வில்  போலீஸ் அதிகாரிகள் , சில பிரமுகர்கள் மற்றும் அரசு சாரா இயக்க பொறுப்பாளர்கள்,  நிருபர்கள் ஆகியோர்களுக்கும் சேவைக்கான நாற்சான்றிழை டத்தோஸ்ரீ முகமட்யூஸ்ரி வழங்கினார்.

சான்றிதழ் பெற்றவர்களில் மாநில நகைக் கடைகளின் சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில், வழக்கறிஞர் பி. பாலசுந்தரம், போலீஸ் அதிகாரி டி. எஸ். பி.  அ. நிர்மலா, போலீஸ் துறையில் சேவையை வழங்கி வரும் ஆர். சந்திரகாந்தன் ஆகியோர் அடங்குவர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset