நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் கின்றாரா தமிழ்ப்பள்ளியை தொடக்கூடாது: சட்டமன்ற உறுப்பினர் எங் ஷீ ஹான்

பூச்சோங்:

ஜாலான் கியாரா மாஸ் சாலை விரிவுப்படுத்தும் திட்டத்தால் கின்றாரா தமிழ்ப்பள்ளி பாதிக்கப்படுகிறது.

பாதிக்கப்படும் பள்ளியின் கட்டடத்தை மாற்றியமைக்கும் வரை மேம்பாடடு நிறுவனம் அப் பள்ளியில் கைவைக்கக் கூடாது என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் எங் ஷீ ஹான் கூறினார்.

சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக 3,000 சதுர அடி பள்ளி வளாகத்தை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த திட்டத்தால் மழலையர் பள்ளி, சிற்றுண்டி சாலை உட்பட பல பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படும்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் எங் கூறியதாவது,

மேம்பாட்டு நிறுவனம் பள்ளிக்கு அதன் வளாகத்திற்கான இழப்பீடாக 50,000 ரிங்கிட் மட்டுமே தருவதாக உறுதியளித்தது. இது போதுமானதாக இல்லை.

பள்ளி கட்டிடத்தின் எந்தப் பகுதியையும் இடிப்பதில் நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

பள்ளிக்கு முன்மொழியப்பட்ட கட்டிடத்தை மாற்றியமைக்கும் திட்டம் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் அடங்கும்.

ஆகவே கோலாலம்பூர் மாநகர் மன்றம், மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு புகார் செய்யப்ப்டும்.

அதே வேளையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சு, பிரதமர் துறைக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் பள்ளி கட்டடத்தை யாரும் தொடக்கூட்டாது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset