நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு

கொச்சின்:

உத்ரா ஜானகி. நான்காம் வகுப்பில் படிக்கும் உத்ரா மலையாள எழுத்தாளர் 
இ.வி ஜெயகிருஷ்ணன் மகள்.

கடந்த வியாழக்கிழமை இரவு உணவு முடித்து உறங்கப் போகும் முன் பெற்றோர் அருகில் வந்த உத்ரா நாளை வெள்ளிக்கிழமை நான் ரமலான் நோன்பு இருக்கப் போகிறேன் என்று கூறியதை கேட்டு தாய் தந்தை இருவரும் ஒருவரையொருவர் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் காலை ஒன்பது மணி வரை தூங்கும் பழக்கமுள்ள உத்ரா,  மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து லைட் போட்டதுடன் நான் நோன்பு வைக்கப் போகிறேன் என்று கூறி இரண்டு டம்ளர் தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு படுத்துக்கொண்டாள்.

தனது மகள் விளையாட்டாக சொல்கிறார் என்று நினைத்துக் கொண்ட பெற்றோர் காலையில் உத்ரா எழும்பிய பின் டிபன் சாப்பிட அழைக்க அவர் நோன்பு வைத்ததில் உறுதியாக இருந்தார்.

அதிகாலை உணவு உண்ணாமல் நோன்பிருக்க சிரமமாக இருக்கும் என்றும், பசியால் மயக்கம் வரும் என்று பெற்றோர் கூறிய போது தனக்கு சோர்வாக உணர்ந்தால் சாப்பிட வருவதாக கூறி நோன்பை தொடர்ந்த உத்ரா மாலை ஆறரை மணி வரை அசாதாரணமாக தனது முதல் நோன்பை பூர்த்தி செய்ய, 
பெற்றோர் வேறு வழியின்றி அருகில் உள்ள மசூதியின் மக்ரிப் பாங்கொலி கேட்கும் நேரத்தில் மகளுக்கு பேரீச்சம் பழமும் எலுமிச்சை சாறும் வழங்கியதுடன், தனது ஒன்பது வயது மகளின் ஆத்மபலத்தை குறித்து ஒரு பதிவும் செய்துள்ளார்...

- குளச்சல் அஜீம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset