நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை 

கொல்கத்தா: 

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 15-ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

“மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. எனவே அவர் வகித்த பதவியின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே, உண்மையைக் கண்டறிய ஆழமான விசாரணை தேவை. ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அவ்வப்போது சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று லோக்பால் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset