நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி உரிமை கோராது

கோலாலம்பூர்:

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி உரிமை கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.

அத்தொகுதியில் பதவியில் இருந்த லீ கீ ஹியோங் நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, தேசிய முன்னணி இந்த முடிவை எடுத்துள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தில் யாரை முன்னிறுத்தினாலும் கட்சி மதிக்கும் என்றார்.

சிலாங்கூரில் உள்ள கோல குபு பாரு அதன் சட்டமன்ற உறுப்பினர் இறந்ததால் காலியாகிவிட்டது என்பதை நாம் அறிவோம்.

இந்த தொகுதியில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதமாக அதிகரித்திருந்துள்ளது.

இருந்தாலும் மதானி அரசாங்கத்தை மதிக்கும் பொருட்டு, அம்னோ தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் அந்த இடத்தை மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர் யாரை நியமித்தாலும், அம்னோ தேர்தல் கேந்திரம் மட்டுமல்ல, தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளும்  கீழே இறங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset