நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நீர் விநியோகத் தடை பிரச்சினைக்கு தீர்வு: சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநிலத்தில் உள்ள ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி கடந்த 2021 ஆண்டு முதல் எதிர்நோக்கிய நீர் விநியோகத்  தடைக்கு தீர்வு பிறந்துள்ளது.

மாநில அரசாங்கம் சுமார் 22 ஆயிரத்து 500 வெள்ளி செலவில் நிர்மாணிகப்பட்ட நீர் குழாய் பொருத்தபட்டு  இப்பள்ளிக்கு நேரடி நீர் விநியோகம் கிடைத்துள்ளது . 

இது பள்ளி நிர்வாகத்திற்கும்  மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
மாநில அரசாங்கம் ஆதரவோடு , பேரா மாநில  தமிழ்ப்பள்ளி தீர்வுக் குழு இயக்க  ஏற்பாட்டில் இப்பள்ளிக்கு நீர் விநியோகம் கிடைத்தது என்று பேரா மாநில  சுகாதார , மனிதவளம் ஒற்றுமை மற்றும் இந்திய நலப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

அப்பள்ளி  இன்று வருகை அளித்த அவர் பள்ளி வளாகத்தில்  புதியதாக பொருத்தப்பட்ட நீர் குழாயை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்

கடந்த 1954 இல் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளியில் தற்பொழுது  15 மாணவர்கள் கல்வி் கற்று வருகிறார்கள், 

இப்பள்ளி் புறநகர் பள்ளியாக  இருப்பதால் மாணவர்கள் சரிவு ஏற்பட்டாலும் அப்பள்ளியை தொடர்ந்து நிலை நிறுத்த வெளியில் இருந்து மாணவர்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.

அப்பள்ளியில் இத்தோட்டத்தில் இருந்த ஒரே ஒரு மாணவன்  கல்வியை மேற்கொண்டு வருகிறார் மற்றவர்கள் வெளியில் இருந்து இப்பள்ளிக்கு வருகிறார்கள்.

 ஆகவே  மாணவர்களின் தேவைக்கு தோட்ட நிர்வாகம் செலவு செய்யவேண்டிய அவசியம் தேவை இல்லை என்பதை கருத்தில் கொண்ட தோட்ட நிர்வாகம் நீர் விநியோகம் தடைக்கு காரணம் என்று சிவநேசன் விளக்கம் அளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset