நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு பெருநாளை முன்னிட்டு 2,500 பேருக்கு உதவிப் பொருட்கள் ஸ்ரீரம்பாய் அல் ஃபரிடியா திருக்குர்ஆன் மனனப் பள்ளி வழங்கியது

கோலாலம்பூர்:

நோன்பு பெருநாளை முன்னிட்டு 2,500 பேருக்கு உதவிப் பொருட்களை ஸ்ரீரம்பாய் அல் ஃபரிடியா   திருக் குர்ஆன் மனனப் பள்ளி வழங்கியது.

30ஆவது ஆண்டாக இப்பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அதன் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி கூறினார்.

நோன்பு பெருநாள் காலங்களில் வசதிக் குறைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சிறிய எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 2,500 பேரை அது எட்டியுள்ளது.

இந்த  நிகழ்வுக்கு தேசிய போலீஸ்படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அய்யூப் கான் மைடின் பிச்சை தலைமையேற்று உள்ளார்.

அவரின் வருகை எங்களின் இந்த நிகழ்வுக்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

மேலும் தேசிய போலீஸ்படை, நெஸ்லே, பிரெஸ்மா, அலிமாஜூ உணவகக் குழுமம், மியாக் உட்பட பல நல்லுள்ளங்களில் ஆதரவில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த ஆதரவுகள் ஒத்துழைப்பின் அடிப்படையில் வரும் காலங்களில் இன்னும் அதிகமானோருக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்று டத்தோ ஜவஹர் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே கடந்த 30 ஆண்டுகளாக இந்த உதவிகளை வழங்கி வரும் ஸ்ரீரம்பாய் அல் ஃபரிடியா   திருக் குர்ஆன் மனனப் பள்ளிக்கும் டத்தோ ஜவஹர் அலிக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த உதவிகள் தேவைப்படும் குடும்பங்களை சென்றடைய வேண்டும். இதுவே எனது விருப்பம் என்று துணை ஐஜிபி டத்தோஸ்ரீ அய்யூப் கான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset