நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் அல்லது 1,000 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை: அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் அரசு பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

இதனை மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி அறிவித்தார்.

நோன்புப் பெருநாள் அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது.

இப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கில் இந்த சிறப்பு உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

மாநில அரசு செயலக நிர்வாகத்தின்கீழ் உள்ள பணியாளர்கள், மத்திய அரசின்கீழ் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு இந்நிதி வழங்கப்படவுள்ளது.

மேலும் கிராம சமூக நிர்வாக மன்றத்தின் தலைவர், கிராம தொடர்பு அதிகாரிகள், கம்போங் பாரு, இந்திய சமூக தலைவர்கள், எம்பிகேகே செயலாளர் உட்பட பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு மாத அலவன்ஸ் வழங்கப்படும்.

நசீர், இமாம், சியாக், மொஅத்தீன் போன்ற பள்ளிவாசல் ஊழியர்கள், அதிகாரிகள், சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின்கீழ் உள்ள  அதிகாரிகளும் 500 சிறப்பு உதவியைப் பெறுவார்கள்.

ஏப்ரல் 8ஆம் தேதி இந்த சிறப்பு உதவி நிதி வழங்கப்படும்.

இந்த சிறப்பு நிதியின் மொத்த மதிப்பு 45 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று ரமலான் மடானி நிகழ்வில் மந்திரி புசார் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset