நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது ராகுல் காந்தி, ஸ்டாலின் கண்டனம்

புதுடில்லி:

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரது  வீட்டிற்கு சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. 

அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவு வெளியிட்டுள்ளார். 

மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது பாஜக ஆட்சியில் வாடிக்கையாகிவிட்டது. 

பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். 

இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும் என்றார் அவர்.

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாஜக அரசு வெறுக்கத்தக்க செயலை காட்டுகிறது.

இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. 

ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை அதிகரித்து, இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset