நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ்  காலுறை பிரச்சினையை இழிவுப்படுத்திய ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

கோலாலம்பூர்:

அல்லாஹ் என்ற வார்த்தை கொண்ட காலுறைகள் விற்பனை செய்வது தொடர்பாக இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதற்காக ஆடவர்  இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட சியோக் வை லூங் (வயது 35) என்பவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும்,  12,000 ரிங்கிட் அபராதமும் விதித்து நீதிபதி சுசானா ஹுசைன் தீர்ப்பளித்தார்.

அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சியோக்கை நேற்று கோலாலம்பூரில் உள்ள செராஸில் போலீசார் கைது செய்தனர்.

கேகே மார்ட்டில் விற்கப்பட்ட காலுறைகளின் புகைப்படங்கள் கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.

இது முஸ்லிம் சமூகத்தின் கோபத்தை சம்பாதித்துடன் அம்னோ இளைஞர்கள் கேகே மார்ட்டை புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர்.

இதனை அடுத்து நாட்டில்  சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset