நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்துடனான ஒத்துழைப்பை மலேசியா மேலும் வலுப்படுத்தும்: பிரதமர்

புத்ராஜெயா:

வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத் துறைகளில் தாய்லாந்துடனான தனது ஒத்துழைப்பை மலேசியா மேலும் வலுப்படுத்தும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

ஶ்ரீ பெர்டானாவில் தூதர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளுடன் மதானி நோன்பு துறக்கும் நிகழ்ச்சியை வரவேற்று உரையாற்றிய அன்வார், 

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் மற்ற பகுதிகளில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

மேலும் ஒத்துழைக்க நாங்கள் ஸ்ரேத்தாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 

ஆசியான், நமது அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறுவதை உறுதிப்படுத்த வெளியுறவு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

2023இல் உலகளவில் மலேசியாவின் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக தாய்லாந்து விளங்குகிறது.

113.16 பில்லியன் ரிங்கிட் வர்த்தகத்தை அது கொண்டுள்ளது என்று  பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset