நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நூர் சஜாத்தின் ஆடம்பர பங்களா ஏலம் விடப்படவுள்ளது

கோலாலம்பூர்:

தொழிலதிபர் முஹம்மது சஜ்ஜத் கமருஸ்ஸமான் அல்லது நூர் சஜாத்தின் சொகுசு குடியிருப்பு 4.68 மில்லியன் ரிங்கிட் ஆரம்ப விலையில் ஏலத்தில் விடப்படவுள்ளது.

பெட்டாலிங் ஜெயாவின் செக்சன் 10இல் அமைந்துள்ள அந்த இரண்டு மாடி பங்களா வரும் மே 13 அன்று ஏலம் விடப்படும் என்று சொத்துடமை முகவர் ஒருவரின் பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு, நூர் சஜாத் இந்த வீட்டை 9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் விற்க முடிவு செய்தார்.

ஆனால் அந்த வீடு தற்போது வங்கியால் 4.68 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஏலம் விடப்படும் என்று அம் முகவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடம் இருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset