நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து ஆலய வளாகத்திற்குள் நுழைந்து இந்தியர்களை இழிவாக பேசிய பெண் - உலு சிலாங்கூரில் பரபரப்பு

உலுசிலாங்கூர்:

செரண்டா, கம்போங் முகமத் தாயிப் என்றழைக்கப்படும் ஶ்ரீ தெரத்தாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள்  நுழைந்த இந்திய முஸ்லிம் பெண் ஒருவர் இந்தியர்களை இழிவாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட ஆலயத்தின் நேர் எதிரே உள்ள நிலத்தை அப்பெண்ணும் அவரின் கணவரான வங்காளதேச ஆடவரும் வாங்கியுள்ளனர். 

அந்நிலத்தில் வீட்டை தவிர வேறு எந்த மேம்பாட்டிற்கும் அனுதிமதி இல்லை. ஆனால், அவ்விருவரும் அங்கு பங்ளா உணவகம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றனர்.

இதனால், ஆலயத்திற்கு பெரும் இடையூறுகள் ஏற்படுவதால், நிர்வாகத்தினர் அவர்களிடம் நல்ல முறையில் பேசியும் நிர்மாணிப்பு பணிகளை நிறுத்தவில்லை என ஆலயத்தின் செயலாளர் பாஸ்கரன் இரசன் முன்னதாக கூறினார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம், போலீஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பிடமும் பல முறை  நடவடிக்கை எடுத்தும் அவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தனர். 

இந்நாட்டில் வங்காளதேசி தைரியமாக இவ்வாறு செயல்பட்டு வருகிறார். ஆனால், மலேசியர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இது தான் வேடிக்கையான விஷயம்.

அமலாக்க தரப்பினர் வந்தால் மட்டும் நல்லவர் வேஷம் போட்டு கொண்டு வேலைகளை நிறுத்தியதாக அவர்கள் நாடகமாடி வந்தனர்.

இரு தினங்களுக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வங்காளதேசி ஆலய நிர்வாகத்தினரை சந்தித்து பேசினார். 

அப்போது, அவரின் மனைவின் அத்தூமீறி ஆலயத்திற்குள் நுழைந்து இந்தியர்கள் கேவலமாக பேசினார். இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளு முல்லில் முடிந்தது. 

அப்போது, அந்த வங்காளதேசியும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பில், இரு தரப்பிலும் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதில் சம்பந்தப்பட்ட இருவரிடமும் போலீசார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். 

நேற்றிரவு திடிரென வங்காளதேசி ஆடவரையும், பாஸ்கரனையும் போலீசார் கைது செய்து மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்துள்ளனர். 

அந்த வங்காளதேசிக்கு மலேசியாவில் மூன்று மனைவிகள் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்தியர்களை இழிவாக பேசிய பெண் இல்லாமல் அவரின் மற்றொரு மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதனால், சுற்று வட்டார மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரையும் தடுத்து வைத்து விசாரிக்க இன்று காலை கோலகுபுபாரு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். 

ஆலய நிர்வாகத்தினருக்கு ஆதரவாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் ப.புவனேஸ்வரன் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். 

வங்காளதே ஆடவருக்கு கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளையில் பாஸ்கரனுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று புவனேஸ்வரன் கூறினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நாளை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, நகராண்மைக் கழக அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வருகை புரியவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset