நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறைகளில் அல்லாஹ் வார்த்தை விவகாரத்தைக் கேலி செய்த ஆடவர் கைது

கோலாலம்பூர்: 

கேகே சூப்பர்மார்ட் கடைகளில் அல்லாஹ் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகளை விற்பனை செய்த விவகாரத்தை முகநூலில் கேலி செய்த சியோக் வை லூங் என்ற ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

35 வயதான சந்தேக நபர் செராஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் மார்ச் 24-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஷுஹைலி முஹம்மத் ஜைன் தெரிவித்தார்.

குற்றவியல் புலனாய்வு பிரிவு, வழக்கு/சட்டப் பிரிவு (டி5), ஜேஎஸ்ஜே புக்கிட் அமான் ஆகியோர் குற்றவியல் கோட் பிரிவு 298A, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233-இன் படி வழக்கை விசாரிக்கின்றனர் என்று அவர் கூறினார். 

வழக்கு இன்னும் விசாரணைக் கட்டத்தில் உள்ளது. 

சமூக ஊடகங்களைப் விவேகமாகப் பயன்படுத்த வேண்டும்.  

மாறாக, நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் குறிப்பாக 3R விவகாரம் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset