நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கேகே சூப்பர் மார்ட்டின் தூதர் பதவியை ஷுயிப் ராஜினாமா செய்வார்

கோலாலம்பூர்:

அல்லாஹ் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகளை விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் கேகே சூப்பர் மார்ட்டின் தூதராக இருக்கும் நகைச்சுவை நடிகரான ஷுயிப் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

தொழிலதிபரான ஷுயிப், காலுறைகளில் அல்லாஹ் என்ற வார்த்தை அச்சிடப்பட்டது மக்களையும் இஸ்லாமிய மதத்தையும் அவமதிக்கும் செயல் என்பதால் தான் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மதம், இனம், ஆட்சியாளர்களின் விவகாரம் குறித்து வியாபாரங்களில் பேசுவது தவறாகும். 

39 வயதான ஷுயிப், பல மத சமூகத்தின் உணர்திறன் பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.

இதுபோன்ற விஷயம் எந்த வகை வணிகத்திலும் அல்லது சூழ்நிலையிலும் நடக்கக்கூடாது.

இருப்பினும், வணிகம் மற்றும் சமூக உணர்திறனைக் கூட உள்ளடக்கியதால் இந்த விவகாரத்தில் மேலும் கருத்துத் தெரிவிக்க ஷுப் மறுத்துவிட்டார்.

நிறுவனத்தின் தூதராக தனது ஒப்பந்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset