நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய ஊதிய முறையை அரசு ஆய்வு செய்கின்றது: ஸலிஹா முஸ்தாப்பா 

கோலாலம்பூர்:

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய முறை இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகப் பிரதமர் துறை கூட்டரசு அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாப்பா தெரிவித்துள்ளார். 

இது குறித்த ஆலோசனைகளும் ஆட்சேபனைகளும் இந்த ஆய்வில் உள்ளீடாக பயன்படுத்தப்படும் என்றார் அவர். 

அதன் பின், ஆய்வின் முடிவுகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காகவும் அதை செயல்படுத்துவதற்கான ஒப்புதலுக்காகவும் சமர்ப்பிக்கப்படும்.

சமர்ப்பிக்கப்பட்ட கருத்துகள், பரிந்துரைகளை அரசாங்கம் பாராட்டுகிறது

மேலும் புதிய முறை எந்தத் தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் அமையும் என்று ஸலிஹா மக்களவையில் தெரிவித்தார். 

அரசாங்கச் செலவினங்களைக் குறைக்கும் வகையில் அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத அரசின் திட்டம் குறித்தும், இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களின் எதிர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டதா என்பது குறித்தும் அறிய விரும்பிய சுஹைஸான் கையாத்தின் கேள்விக்கு ஸலிஹா இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஸாலிஹா, புதிய முறை இன்னும் ஆய்வுக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது பணியாற்றும் அதிகாரிகள், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.

இம்மாத தொடக்கத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்படும் புதிய ஊதிய முறை பாதிக்கப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததாக ஸலிஹா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset