நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய சுற்றுப் பயணிகளிடம் இந்தியாவில் கொள்ளை: 10 பவுன் தாலி கொடி, 2,000 ரிங்கிட் இழந்தனர்

கோலாலம்பூர்:

இந்தியாவில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் மலேசிய சுற்றுப் பயணிகள் 10 பவுன் தாலி கொடி, 2,000 ரிங்கிட்டை இழந்தனர்.

@ryreesya என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

நாங்கள்  இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து மலேசியாவுக்குத் திரும்புவதற்கு தயாராக இருந்தனர்.

அப்போது பயணிகளுக்கும் ஷாப்பிங் செல்ல ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டது.

பிக்பாக்கெட்டுகளுக்குப் பெயர் போன பகுதி என்பதால், அவர்கள் அனைவரும் தங்கள் உடமைகளை பேருந்திலேயே விட்டுச் செல்லுமாறு சுற்றுலா வழிகாட்டி அறிவுறுத்தியுள்ளார்.

ஷாப்பிங் செய்வதற்கு இந்திய ரூபாயை மட்டுமே எடுத்துச் செல்லுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் அனைவரும் அதை ஒப்புக்கொண்டோம். 

ஏறக்குறைய ஒரு மணி நேர ஷாப்பிங்கிற்குப் பிறகு, சுற்றுலா வழிகாட்டி, உதவியாளர், பேருந்து ஓட்டுனர் எங்களுக்காக பேருந்தில் காத்திருந்தனர். 

நாங்கள் திரும்பியதும், விமான நிலையத்திற்கு எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் ஹோட்டலுக்குச் சென்றோம்.

அப்போது தான் பயணிகள் தங்களிடம் இருந்த சில பணம், நகைகள் காணாமல் போனதை உணர்ந்தனர்.

இதனால் அனைவரையும் தங்கள் உடமைகளைச் சரிபார்க்கத் தூண்டியது.

அப்போது மொத்தம் 2,000 ரிங்கிட் வரை திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

என் சகோதரி தனது கைபையில் வைத்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை கூட தொலைத்துவிட்டார். 

காணாமல் போன பொருட்களைப் பற்றி சுற்றுலா வழிகாட்டியிடம் தெரிவித்தோம். 

அதற்கு அவர் பேருந்தில் இருந்து திருடுவதற்கான வாய்ப்பை மறுத்தார் என்று ரைரீஸ்யா விளக்கினார்.

இக்கொள்ளை சம்பவம் குறித்து சுற்றுலா வழிகாட்டி, பேருந்து ஓட்டுநர், உதவியாளர் அனைவரிடம் விசாரித்த போதும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

நாடு திரும்பியதும் என் சகோதரி மார்ச் 17ஆம் தேதி ஜொகூர் தம்போய் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் செய்தார். 

காவல்துறையினரின் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த கருத்தும் கிடைக்கவில்லை என்று ரைரீஸ்யா  கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset