நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காய்கறி வியாபாரிகள் காரணம் சொல்லுவதை நிறுத்துங்கள்: அமீர் அலி மைடின்

பெட்டாலிங் ஜெயா:

காய்கறி வியாபாரிகள் விலை உயர்வு, தொழிலாளர் நெருக்கடி. உற்பத்தியில் 40% குறையும் போன்ற காரணங்களைச் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று மைடின் பேரங்காடியின் இயக்குனர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார். 

போதுமான தொழிலாளர் இருப்பு இருக்க வேண்டும். பெருந்தோட்டக் கைத்தொழிலுக்காக கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் முன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக அவர் கூறினார்.

இது இடைநிறுத்தப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் பல வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

எனவே, தொழில்துறையினர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஒரு காரணமாகச் சொல்லக் கூடாது.

காரணம் அரசாங்கம் ஏற்கனவே விவசாயத்திற்கு கணிசமான எண்ணிக்கையை அனுமதித்துள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை அடுத்த மாதம் சந்தை விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது காய்கறிகளின் விநியோகத்தில் 40% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மார்ச் 8 புத்ராஜெயா தனது தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் 2.0 இன் கீழ் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 31 என நிர்ணயித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் அறிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி வரை, 20,970 வெளிநாட்டு தொழிலாளர்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு தளர்வு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், மலேசிய காய்கறி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் லிம் சேர் க்வீ, கடந்த வாரம் இந்த நிலைமை மோசமடையும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். பல இந்தோனேசிய மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் ரமலான் நடுப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.

அவர்களில் சிலர் திரும்பி வர வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், அமீர் அந்த அச்சங்களை நிராகரித்தார்.

இது தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கக்கூடாது என்று கூறினார்.

இது ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset