நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை கோலோ அருகே வெடிகுண்டு சத்தம்: மலேசியா- தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது 

சுங்கை கோலோ: 

சுங்கை கோலோ மாவட்டத்தின் குவாலோசீரா, பாசேமாஸ் ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை அதிகாலையில் பயங்கரமான வெடிகுண்டு, துப்பாக்கி சத்தங்கள் கேட்கப்பட்டதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். 

இதனால் மலேசியா- தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல் படை அறிவித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலமுறை துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் குடும்பத்துடன் உறங்கிய போது அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் 45 வயதான் இமி என்ற குடியிருப்பாளர் தெரிவித்தார். 

சுங்கை கோலோ பகுதியைச் சுற்றிய சில சட்டவிரோத பாதகளையும் அதிகாரிகள் கண்டறிந்ததோடு அதனை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, சுங்கை கோலோ பகுதியில் கடுமையான வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு அரங்கேறியதாக பேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்று வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தாய்லாந்து காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து நாட்டின் எல்லையில் பாதுக்காப்பை உறுதிப்படுத்துவதை அரச மலேசிய காவல்துறை கடப்பாடு கொண்டுள்ளது என்று ஐ.ஜி.பி ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset