நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ அப்துல் மாலிக்கிற்கு எதிரான குற்றச்சாட்டு; ஆதன் தமிழ் மீடியா, சவுக்கு மீடியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: வழக்கறிஞர் கவிநாதன்

சென்னை: 

பிரபல வர்த்தகர் டத்தோ அப்துல் மாலிக்கிற்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் ஆதன் தமிழ் மீடியா, சவுக்கு மீடியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரின் சென்னை வழக்கறிஞர் கவிநாதன் கூறினார்.

இந்தியாவில் போதைப்பொருள் குற்றத்திற்காக பிடிப்பட்ட ஜாபர் சாதிக் என்பவரின் முதலாளி தான் மலேசிய வர்த்தகர் டத்தோ அப்துல் மாலிக் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இணையத்தள ஊடகங்களான ஆதன் தமிழ் மீடியா, சவுக்கு மீடியா ஆகிய இரு ஊடகங்களும் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளன.

ஜாபர் சாதிக், டத்தோ அப்துல் மாலிக் தொடர்பு உள்ளது. மலேசியாவின் பெரிய டான் என யூடியூபில் பொய்யான அவதூறுகளை பரப்பி அவரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

இவை அனைத்தும் ஆதாரங்கள் இல்லாமலும் ஆவணங்கள் இல்லாமலும் சில ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக டத்தோ அப்துல் மாலிக் சார்பாக மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்திலும் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின்  டாங் வாங்கி காவல் நிலையத்திலும் போலீஸ் புகார் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆதன் தமிழை சேர்ந்த மாதேஷ், வார்க்கி மீதும் சவுக்கு சங்கருக்கு எதிராகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்கான நோட்டீடும் அனுப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலுக்கு இதுவரை எந்தவொரு ஆதரங்களும் இல்லை என்பதே உண்மையாகும். 

இவை அனைத்தும் டத்தோ அப்துல் மாலிக்கின் பெயரைக் களங்கப்படுத்தும் நடவடிக்கை என்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்  வழக்கறிஞர் கவிநாதன் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset