நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறையில் அல்லா வார்த்தை: கேகே சூப்பர் மார்ட் மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும்

கோலாலம்பூர்:

அல்லா வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகளை விறபனை செய்த கேகே மார்ட் சூப்பர் மார்ட் மன்னிப்பு கோரியிருந்தாலும் அக்கடை மீது உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் ஷம்சூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கேகே சூப்பர் மார்ட் கடைகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதாகவும் அனைத்துக் காலுறைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

உள்துறை அமைச்சு இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்து கேகே சூப்பர் மார்ட் கடைகளில் சோதனை மேற்கொண்டு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அவர் கூறினார். 

இருப்பினும், இந்த காலுறைகள் உள்நாட்டு சந்தையில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் விசாரணை தொடர்கிறது என்று மக்களவையில் வாய்மொழி கேள்வி அமர்வின் போது விளக்கம் அளித்த ஷம்சுல் அனுவார் கூறினார். 

இஸ்லாமியர்களின் கடவுளைக் கலங்கப்படுத்தும் வகையில் இருந்த சம்பவம் தொடர்பில் உள்துறையமைச்சு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அறிய விரும்பிய முகமட் ஷஹர் அப்துல்லா கேட்ட கேள்விக்கு ஷம்சூல் இவ்வாறு பதிலளித்தார். 

மேலும், கருத்து தெரிவித்த ஷம்சுல், சம்பந்தப்பட்ட தரப்பினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்றாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset