நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறான தகவல்களைத் தவிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்குப் பொருளாதார விரிவுரைகளை வழங்க அரசு தயார்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

மக்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க அரசாங்கம் பொருளாதார விரிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். 

பொருளாதாரம் மற்றும் அரசு துறை உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முன்முயற்சிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறைத்து விமர்சிப்பதாக நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு 13%0-க்கும் அதிகமான ஊதிய உயர்வை அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் மற்றும் கருவூல பொதுச் செயலாளர் ஜோஹான் மாஹ்மூத் மெரிக்கன் ஆகியோருடன் எதிர்க்கட்சிகளுக்குப் பொருளாதாரக் கல்வி கற்பிக்க அமர்வுகளை ஏற்பாடு செய்யலாம் என்று அன்வார் கூறினார்.

இல்லையென்றால், எதிர்க்கட்சியினர் குழப்பமடைவார்கள். அவர்கள் குழப்பமடையும் போது ​​அவர்கள் பொதுவில் விமர்சிப்பார்கள். இதனால், மக்கள் மேலும் குழப்பமடைவார்கள் என்று அவர் நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் முன் முயற்சிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஓர் அர்த்தமுள்ள உயர்வாக இருக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset