நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவைத் தேசியக் கூட்டணி பெறுகின்றது: மொஹைதின் 

உலு சிலாங்கூர்: 

தேசியக் கூட்டணி முன்னாள் அம்னோ உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுகின்றது என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்திருக்கின்றார். 

அம்னோ டிஏபியுடன் ஒத்துழைக்க முடிவு செய்ததே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் தற்போது தேசியக் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்ததையும் மொஹைதின் குறிப்பிட்டார். 

கோல குபு பாரு இடைத்தேர்தலில் தேசியக் கூட்டணிக்கு இந்த ஆதரவு கூடுதல் பலபாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

இது மூன்று ஆண்டுகளில் நடைபெறும்  16-ஆவது பொதுத் தேர்தல் வரை தொடரும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி, அதிக எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் வாக்களிக்காத நிலையில், அதிக வாக்குப்பதிவை உறுதி செய்வது முக்கியம் என்று மொஹைதின்  கூறினார்.

இங்கு கிட்டத்தட்ட 47% மலாய் வாக்காளர்கள் உள்ளனர்/ ஆனால் வாக்களிக்க வெளியே வந்தவர்கள் மொத்தத்தில் 70% கூட இல்லை.

சீனர்கள், சுமார் 30% வாக்காளர்களைக் கொண்டிருந்தாலும், தேர்தலின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதில் புத்திசாலித்தனமாக இருந்தனர். அங்கு வாக்குப்பதிவு விகிதம் 90% ஐ எட்டியது.

அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மலாய்க்காரர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் அறிந்திருந்தால், கோல குபு பாரு இடைத்தேர்தலின் முடிவுகள் மத்திய அரசுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் என்று முகைதின் கூறினார்.

தேசியக் கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால், உள்ளூர் அரிசி தட்டுப்பாடு பிரச்சனையை இரண்டு வாரங்களுக்குள் தீர்த்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

கூட்டங்கள் பல முறை நடந்தாலும் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்று அவர் கூறினார்.

உள்ளூர் அரிசி விளைச்சலைக் குறைக்க பல்வேறு காரணிகள் இருப்பதாகவும், அதை விரைவில் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் முகைதீன் கூறினார்.

கடந்த மாதம், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம், அரிசி போதுமானதாக இருப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset