நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட் பரிமாற்றத் தரவு தவறாக வெளியிட்டது ஏன்? கூகுளிடம் விளக்கம் கோரியது அரசு: ஃபஹ்மி

புத்ராஜெயா:

ரிங்கிட் பரிமாற்றத் தரவு துல்லியமாக இல்லாதது தொடர்பில் கூகுளிடம் அரசு விளக்கம் கோரியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பாட்சில்  தெரிவித்தார்.

நேற்று வெளியிடப்பட்ட 1 அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மாற்று விகிதத்தின் தவறான தரவு 4.98 ரிங்கிட்டை எட்டியது குறித்து கூகுளிடம் அரசாங்கம் விளக்கம் கோரியுள்ளது.

இண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான், பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ அப்துல் ரஷீத் கஃப்பார் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் தவறான தரவுகள் மலேசியர்களிடையே அதிருப்தியையும் தவறான புரிதலையும் ஏற்படுத்திய ஒரு மோசமான அறிகுறியாகும் என்றாகும்.

மலேசியர்களுக்கான குறிப்புகளில் கூகுள் ஒன்றாகும். எனவே கூகுள் இது குறித்து விளக்கமும் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அரசு நம்புகிறது.

கோலாலம்பூர் பசுமை தேநீர் நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset