நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கு மட்டம் போடக் கூடாது; தகாத வார்த்தைகள் பேசக் கூடாது: வைரலாகும் அண்ணன் - தம்பிக்கிடையிலான ஒப்பந்தக் காணொலி

பூச்சோங்:

கோலா சிலாங்கூரில் பள்ளிக்கு மட்டம் போடக் கூடாது, தகாத வார்த்தைகளைப் பேசக் கூடாது என்ற தன் அண்ணன் எழுதிய எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் முதலாம் படிவ மாணவர் கையெழுத்திடும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

இந்த ஒப்பந்தத்தில் மொத்தமுள்ள 9 விதிகளை அம்மாணவர் பதினேழு வயது வரை கடைப்பிடிக்க வேண்டும். ஏதேனும் ஒரு விதியை அம்மாணவர் மீறினாலும் அவருக்குக் குடும்பத்திலிருந்து எந்தப் பணவுதவியும் ஆதரவும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாணவர் செய்யக் கூடிய செய்யக் கூடாத செயல்களைப் பட்டியலிட்டிருந்த அந்த ஒப்பந்தத்தில் விதிகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திடும் காணொளி சமூக ஊடக பயனர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.  

அம்மாணவரின் பெற்றோர் வேலை செய்யாததால் குடும்பத்தை வழி நடத்தும் பொறுப்பு மூத்த மகனுக்கு இருக்கின்றது. 

அதன் அடிப்படையில் தனது தம்பியை தடம் மாறி செல்லாதிருக்க அந்த ஒப்பந்தத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். 

அந்தக் காணொளி @insuranceagentadwin என்ற சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

தற்போது அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவு பகிரப்பட்டு வரவேற்பையும் பெற்றுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset