நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா போதைப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல: ஐஜிபி

கோலாலம்பூர்:

மலேசியா போதைப் பொருள் உற்பத்தி அல்லது ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல என்று ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு சுமார் 20 சிறிய அளவிலான போதைப் பொருள் தயாரிப்பு கிடங்குகள் அகற்றப்பட்டன.

இதை  ஒப்பீடுகையில் ஒரு  சில சின்ன கிடங்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்ட அல்லது புதிதாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படலாம்.

ஆகவே மலேசியா போதைப் பொருள உற்பத்தி செய்யும் நாடு அல்ல.

காரணம் போலீஸ் ஆறு மாதங்களுக்குள் அனைத்து கிடங்குகளையும் மூடிவிட்டது.

மேலும் தாய்லாந்து, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட போதைப் பொருட்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இதற்கான போக்குவரத்து மையமாக மலேசியா இருப்பதை போலீஸ் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset