நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியுரிமை விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட நம்பிக்கை கூட்டணி அனுமதிக்க வேண்டும்: அம்பிகா

கோலாலம்பூர்:

சர்ச்சைக்குரிய குடியுரிமை நிபந்தனைகளை திருத்துவதற்கான தீர்மானத்தின் மீது வாக்களிக்கும்போது தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட நம்பிக்கை கூட்டணி அனுமதிக்க வேண்டும்.

முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் இதனை வலியுறுத்தி உள்ளார்.

சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை அந்தஸ்து உட்பட அரசியலமைப்பில் உள்ள பல விதிகளை திருத்த  புத்ராஜெயாவின் திட்டம் கொண்டுள்ளது.

இது குறித்து அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டபோது தெளிவற்ற அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அபத்தமான சட்டத் திருத்தத்திற்கு தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதந்திரமாக  வாக்களிக்க  அனுமதிக்க வேண்டும்.

இதற்கான சாவாலை நம்பிக்கை கூட்டனிக்கு நான் விடுகிறேன்.

இது போராட வேண்டிய முக்கியமான கொள்கை. தேசிய முன்னணி அல்லது தேசியக் கூட்டணி  அரசாங்கங்கள் கூட இதை ஒருபோதும் செய்ததில்லை.

ஆனால் மடானி அரசு இதை செய்வது அபத்தமாக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset