நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி அதிர்ச்சி

ரியாத்:

ஏஎப்சி கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அல் அவால் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அய்ன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஆனால் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.

வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய அல் அய்ன் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் நசர் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அல் நசர் அணியினர் தோல்வி கண்டு வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset