நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொக்கோ விவசாயப் பகுதி  10,000 ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும்

கோலாலம்பூர்:

நாட்டின் மொத்த கொக்கோ விவசாயப் பகுதி 5,985 ஏக்கரிலிருந்து 10,000 ஏக்கருக்கு விரிவுபடுத்துவது தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட நிலங்களில் பயிரை வளர்ப்பதன் மூலம், ஒரு முக்கிய சந்தையை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்ட முதன்மை கொக்கோ பீன் வகைகளைப் பயிரிடுவதில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

உள்நாட்டு கொக்கோ சந்தையின் உத்தரவாதமான வாய்ப்புகளுடன், 2025-ஆம் ஆண்டிற்கான 3 மில்லியனில் தொடங்கி, இலக்கின் படி 10,000 ஏக்கர் நிலப்பரப்பை அதிகரிக்க தேவையான ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது என இன்று நாடாளுமன்ற அமர்வின் கேள்வி பதில் அங்கத்தில் போது அவர் கூறினார்.

கொக்கோ தொழிற்துறையை மேம்படுத்துவதற்குத் தோட்ட மற்றும் பொருட்கள் அமைச்சகத்தின் முயற்சிகள் பற்றி அறிய விரும்பும் தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிட்சுவானின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கேபிகே மற்றும் மலேசிய கொக்கோ வாரியம் ஆகியவை புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள தொழில்நுட்பங்களை நல்ல விவசாய நடை முறைகளாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்து உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், இயந்திரமயமாக்கல் மற்றும் இணையம் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தோட்ட நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்கவும் செய்கின்றன.

இந்த முயற்சியானது அப்ஸ்ட்ரீம் துறையில் இளைஞர்களின் ஆர்வத்தை மேம்படுத்துவதோடு, நிலையான கொக்கோ சாகுபடியை உறுதி செய்வதற்காக ஆபரேட்டர்கள் மற்றும் சிறு உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் ஆதரவை வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset