நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் மந்திரி புசார் ஒரு 'கேங்க்ஸ்டர்' என்ற குற்றச்சாட்டுகளை மஇகா, மசீச நிராகரித்தன

ரவூப்:

பகாங் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோடி ஒரு 'கேங்க்ஸ்டர்' என்ற  குற்றச்சாட்டுகளை மசீச, மஇகா கட்சிகள் நிராகரித்துள்ளன.

டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி  வான் இஸ்மாயில் ஒரு குண்டர் என்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட குற்றச்சாட்டை கடுமையாக நிராகரிக்கிறோம் என்று மசீச தலைமை செயலாளர் டத்தோ சோங் சின் தெரிவித்தார்.

கேமரன்மலை உட்பட நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதற்கு வான் ரோஸ்டி ஒரு மாநில அரசாங்கத் தலைவராக தனது பொறுப்பை நிறைவேற்றினார்

பகாங் மாநிலத்தை வழிநடத்தும் வான் ரோஸ்டியின் சாதனை சிறப்பானது. மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பு, அனைத்து குழுக்களின் மக்களும் பல்வேறு உதவிகளைப் பெறுவதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

டத்தோஸ்ரீ வான் ரோஸ்டிக்கு எதிரான மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) முன்னாள் உதவித் தலைவர் கோபாலகிருஷ்ணனின் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று  பகாங் மஇகா உச்சமன்ற உறுப்பினர் டத்தோ கே.தமிழ்செல்வன் கூறினார்.

இவர் உண்மையில் இந்திய மக்களுக்கு, அதாவது ஏழைகள், ஊனமுற்றோருக்கு தன்னால் முடிந்ததைச் செய்கிறார், 

பகாங் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு பலவற்றை வழங்கியுள்ளார்.

மஇகாவை விட்டு வெளியேறிய கோபாலகிருஷ்ணனின் இருண்ட அரசியல் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே. பின்னர் பிகேஆரில் அவர் இணைந்தார்.

மீண்டும் மஇகாவிடம் தஞ்சம் புகுந்தவரை மஇகாவால் நீக்கப்பட்டார்.

பகாங் மாநில மந்திரி பெசாரை விமர்சனம் செய்த கோபாலகிருஷ்ணனின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset