நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் தேசிய நிலையில் ஆதி பறை மேள இசை இயக்கம் உருவானது

ஈப்போ:

உலகில் பன்னெடுங்காலமாக தமிழர்களின் முக்கிய இசைக் கருவியாக இருந்து வரும் பறை (தப்பு)  இசையை நமது நாட்டில் நிலை நிறுத்த தேசிய நிலையில் ஆதி பறை  தப்பு மேளம் இயக்கம்  பதிவானது.

இந்த பதிவின் பிரகன  நிகழ்வு இன்று ஈப்போவில்  ஜாலான் லாங் இண்டாவில்  மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

நாட்டுப்புற இசையில்  பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிகழ்வுகளில்  இந்த இசையின் முழக்கத்தைக் காணலாம் 

இதில்  ஈடுபட்டுள்ளவர்களை ஒரங்கிணைக்க தேசிய நிலையிலான இந்த இயக்கம் உருவாக்கப்பட்டதாக அதன் தேசியத் தலைவர் பி. சுரேஸ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  மலேசியாவில் இருந்து  தப்பு மேள இசைக் கலைஞர்கள்  பலர் கலத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்ந நிகழ்வை உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அரப்பாட், மகப்பேறு மருத்துவர் டாக்டர் வ. ஜெயபாலன் இந்த இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இதில் பேசிய முகமட் அராப்பாட், தமிழர்களின் இசைகளில் ஒன்றாக திகழும்    இந்த தப்பு மேளம் இசை  நமது நாட்டில் நிலை நாட்டவும்  இளைஞர்களை ஒருங்கிணைக்கவும்  அமைக்கப்பட்ட இந்த இயக்கம் தொடர்ந்து பிரபல படுத்த  போட்டி நிகழ்வுகளை நடத்தவேண்டும். 

அதற்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்

 அதில் பிற இன சமுகத்தினர்கள் ஈடுபட செய்வதின் வழி பிற இனத்தவர்களும் இந்த தப்பு மேள இசையின் மகத்துவத்தை அறிந்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார்.

இதில் பேசிய டாக்டர் வ. ஜெயபாலன், இந்த இசை இந்திய இளைஞர்களின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. 

அவர்கள் முறைப்படி இசையை வழங்கவேண்டும் .  கட்டுக்கோப்பு அவசியம் என்று ஆலோசனை வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset