நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் பத்து ஆண்டு பதவிக்கால வரம்பு சட்டம்: பிரதமர் அன்வார்

கோலாலங்காட்:

பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் பத்து ஆண்டுகளாக வரையறுக்கும் சட்டம், தன்னிடமிருந்தே அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

இந்த சட்ட முன்மொழிவு மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், பிறருக்காக மட்டுமே சட்டத்தை இயற்றாமல், தன்னையும் கட்டுப்படுத்த அவற்றை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இந்த சட்டம் என்னிடமிருந்தே தொடங்க வேண்டும்; அது எனக்கும் பொருந்த வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

பந்திங்கில் உள்ள கம்போங் ஸ்ரீ செடிங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின் ஊடகங்களை சந்தித்த போது, பிரதமர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset