நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் தொடர்மழை தாக்கம்: பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கின

கோத்தா கினபாலு:

சபா மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், சில பள்ளி கட்டடங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடாஸ் மாவட்டத்தில் உள்ள பன்டான் மண்டமாமை தொடக்கப் பள்ளியில், வெள்ளத்தின் நீர் அளவு பள்ளியின் கூரை அருகே வரை உயர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய மாநில கல்வித் துறை இயக்குநர்டத்தோ ரெய்சின் சைடின், பிடாஸ் மாவட்டம் வெள்ள பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, பல பள்ளிகளுக்குச் செல்லும் சாலைகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், தற்பொழுது பள்ளி விடுமுறை நடைபெறுவதால் மாணவர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், வரும் திங்கட்கிழமைக்குள் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset