நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு ரமலான் சந்தைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சமையல் செய்யத் தடை

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு மாநகராட்சி (MBPP) தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து ரமலான் சந்தைகளிலும், வெளிநாட்டு குடிமக்கள் வியாபாரம் செய்வதையோ அல்லது உணவு சமைப்பதையோ தடுப்பதற்காக, வழக்கமான கண்காணிப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

MBPP மேயர், டத்தோ இர். ஏ. ராஜேந்திரன் கூறுகையில், கடை உரிமையாளர்கள் வெளிநாட்டு குடிமக்களுக்குக் கடைகளை வாடகைக்கு வழங்கினாலோ, அல்லது உணவு தயாரிக்கும் பணிகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என MBPP மேயர், டத்தோ இர். ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டு தொழிலாளர்கள் வியாபாரத்திற்கு உதவ அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ரமலான் பஜார்களில் விற்கப்படும் உணவுகளைச் சமைப்பதற்கு அனுமதி இல்லை.

"எங்கள் நிர்வாகத்தின் கீழ் தற்போது 27 ரமலான் சந்தைகள் உள்ளன. கடந்த ஆண்டு அது 26ஆக இருந்தது. லோரோங் குலிட் பகுதியில் கூடுதல் விண்ணப்பம் கிடைத்ததால் ஒரு புதிய இடம் சேர்க்கப்பட்டுள்ளது," என்று இங்கு நடைபெற்ற பினாங்கு முஸ்லிம் லீக் ரமலான் சந்தை திறப்பு விழாவிற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

"பொது மக்கள் தங்களின் வாகனங்களைச் சிறிது தூரத்தில் நிறுத்தி நடந்து செல்ல வேண்டும். ரமலான் சந்தைகள் அதிக மக்கள் கூடும் இடமாக இருப்பதால் நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இருப்பினும், நல்ல திட்டமிடலின் மூலம் அதை குறைக்கலாம்.

"MBPP தரப்பில், பார்க்கிங் அமலாக்கத்தில் நெகிழ்வான அணுகுமுறை பின்பற்றப்படும். இருப்பினும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset