நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்மொழிப் பள்ளி குறித்து அம்னோ இளைஞர் தலைவர் குழப்பமடைந்துள்ளார்: ராமசாமி

கோலாலம்பூர்:

நாட்டில் தாய்மொழிப் பள்ளி குறித்து அம்னோ இளைஞர் தலைவர் அக்மால் சாலே குழப்பமடைந்துள்ளார் என்று பினாங்கு முன்னாள் துணை முதல்வர் ராமசாமி கூறினார்.

இன ஒற்றுமை பிரச்சினையில் அம்னோ இளைஞர் தலைவர் அக்மால் சாலே குழப்பத்தில் உள்ளார்.

கல்வி முறையை விரிவான மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அக்மால் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க அவர் விரும்புகிறாரா என்று ராமசாமி கேள்வி எழுப்பினார்.

நாட்டில் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் இன துருவமுனைப்புக்கு தாய்மொழிப் பள்ளிகளே காரணம் என்று அவர் தவறாக நினைக்கிறார்.

இதனால்தான் மலாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தாய்மொழிப் பள்ளிகளை மறுபரிசீலனை செய்ய அவர் அரசாங்கத்தை பரிந்துரைத்துள்ளார்.

நாட்டில் உள்ள தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறாரா?

இந்த நாட்டில் இன, மத பிரிவினைக்கு அவர் தாய்மொழிப் பள்ளிகளை தொடர்புபடுத்துகிறாரா என்று உரிமை இந்தியக் கட்சியை வழிநடத்தும் ராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset