நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய, தாய்மொழிப் பள்ளிகளை ஒருங்கிணைக்க சிறப்பு கலந்துரையாடல்: அம்னோ இளைஞர் பிரிவு

கோலாலம்பூர்:

நாட்டில் இன ஒற்றுமையின் இடைவெளியைக் குறைக்க தேசிய, தாய்மொழிப் பள்ளிகளை கல்வி நீரோடைகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் தேசிய கலந்துரையாடல்  நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஹ்மத் சாலே முன்மொழிந்தனர்.

இந்த நேரத்தில் இனம் தொடர்பான விவாதங்கள், இந்த நாட்டில் பல இனங்களைச் சேர்ந்த மக்களிடையே மதிப்புகளில் இன்னும் இடைவெளி, புரிதல் பிரிந்து இருப்பதைக் காட்டுகிறது.

வறுமையில் வாடும் இனங்களுக்கிடையேயான தவறான புரிதல், பள்ளி நாட்களில் இருந்து தொடங்கும் பிரிவினை முறையின் விளைவாகும்.

இதன் அடிப்படையில் தேசியக் கல்வியை ஒருங்கிணைக்கும் புதிய பார்வைகளை வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஆராய்வதற்கு ஒரு தேசிய கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.

இதனை அம்னோ இளைஞர் பிரிவு பரிந்துரை செய்கிறது என்று அக்மால் கூறினார்.

தாய் மொழிக் கல்வியின் பிரச்சினை சிக்கலானது. உணர்திறன் கொண்டது என்பதை ஒப்புக்கொண்டதாக அக்மால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset