நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனித உரிமை கண்காணிப்பகத்தை சந்திக்க தயார்: சைபுடின்

புத்ராஜெயா:

குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவலில் துஷ்பிரயோகம், மரணம் நிகழ்ந்ததாக அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்துடன் ஒரு சந்திப்பை நடத்த தாம் தயார் என்று  உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

இந்த சந்திப்பின் மூலம், சமீபத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 

காவலில் இருந்தபோது துஷ்பிரயோகம் காரணமாக இறந்தவர்களின் பட்டியலையும் மனித உரிமை கண்காணிப்பகம் ஆதாரங்களையும் காட்டும் என் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

புகார் அளித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை  என்னை நேரில் சந்திக்க அழைக்கிறேன்.

முடிந்தால் துஷ்பிரயோகம்,  மரணம் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கூறவும்.

பாதிக்கப்பட்டவர் யார் என்பதைக் குறிப்பிடவும், டிப்போவில் இது எங்கு நடந்தது? சரியான எண்ணைக் கொடுங்கள்? என  இன்று தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset