நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணிக்கு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவு அதிகரிக்கும்: மொஹைதின்

கோலாலம்பூர் -

அடுத்த 16ஆவது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணிக்கு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

இதன் மூலம் அதிக தொகுதிகளில் தேசியக் கூட்டணி வெல்லும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

தலைநகரில் நடந்த தேசியக் கூட்டணி 2024 மக்கள் பிரதிநிதிகள் மாநாடு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் ஆதரவை ஐந்தில் இருந்து 10 சதவீதமாக மட்டுமே கூட்டணி பதிவு செய்துள்ளது.

எனவே, மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை அதிகம் ஈர்க்கும் வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

அதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் தேசியக் கூட்டணியின் நிலைப்பாடாக இருக்கும்.

அதே நேரத்தில், மேலும் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சிகளை திட்டமிடுவதற்கு தேசியக் கூட்டணி உறுப்பு கட்சிகளின் பங்கை, குறிப்பாக கெராக்கானை  அவர் கோரினார்.

சீனர்கள், இந்தியர்கள், பிறரின் ஆதரவை நாம் எவ்வாறு ஈர்க்க முடியும் என்பதற்கான வழிகளையும் முயற்சிகளையும் நாம் அடையாளம் காண வேண்டும் என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset