நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு மே 31 இறுதி நாள்: சைபுடின்

கோலாலம்பூர்:

நாட்டில் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு வரும் மே 31ஆம் தேதி தான் இறுதி நாள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களை முறையான துறையில் பணியமர்த்துவதற்கு முதலாளிகளுக்கு மே 31ஆம் தேதி  காலக்கெடு நீட்டிக்கப்படாது.

ஆகையால் அந்நிய்த் தொழிலாளர் தொகுப்பில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கான உச்சவரம்பு பூர்த்தி செய்யப்படும் என்று அரசாங்கம் நம்புகிறது.

இந்த விவகாரத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியும்.

இருந்தாலும் பல நியாயங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார அமைச்சர் நிர்ணயித்ததன் அடிப்படையில், அந்நியத் தொழிலாளர்களுக்கான உச்சவரம்பு மொத்த தொழிலாளர் தொகுப்பில் 15% ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு நவம்பரில் 17 மில்லியனாக இருந்தது.

புள்ளிவிவரத்தின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,550,000 ஆக இருக்க வேண்டும்.

பிப்ரவரி மாத நிலவரப்படி, குடிநுழைவுத் துறை திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,130,931 ஆகும்.

தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் 2.0இன் முன்னேற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த முன்னறிவிப்பின் அடிப்படையில், மே 31ஆம் தேதிக்குள் 15% உச்சவரம்பு எட்டப்படும், என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset