நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும்: போலீசுக்கு அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர்:

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்படும் புகார்கள் மீது போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் இப்போது வெளிப்படையாக நடக்கின்றன.

பாதிக்கப்பட்ட சிலர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மத ஆசிரியர்கள் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மதிப்பு, ஒழுக்கம் பற்றி பேசும் ஒரு நாட்டிற்கு இது வெட்கமாக இருக்கிறது.

அதே வேளையில் படிக்க மிகவும் வேதனையான அறிக்கைகளை நாங்கள் காண்கிறோம் என்று அவர் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் கூறினார்.

பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு பரவலான பிரச்சனை என்றும், தற்போது பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் தடுப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டிருப்பதால் அது கட்டுப்படுத்தப்படும் என்று நம்புவதாக அன்வார் கூறினார்.

இந்தச் சட்டத்தைத் தவிர, பதிவு செய்யப்பட்ட புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset