நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹரிராயாவுக்கு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதியா? கியுபேக்ஸ்-க்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம் 

பெட்டாலிங் ஜெயா: 

அடுத்த மாதம் கொண்டாடப்படும் ஹரிராயா பெருநாளுக்காக அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதி வழங்குமாறு கியுபேக்ஸ் முன் வைத்த கோரிக்கைக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. 

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக தலா 2000 வெள்ளி வழங்கப்பட்டப் பிறகும் கியுபேக்ஸ் இவ்வாரான கோரிக்கையை முன் வைப்பது சரியா என்று நெடிசன்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். 
        
அரசாங்க ஊழியர்களுக்கான சங்கமான கியுபேக்ஸ் அடிக்கடி அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு சலுகைகள் கேட்பது குறித்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் குற்றம் சாட்டி வந்தாலும் பொருளாதார வல்லுநர்கள் கியுபேக்ஸ் அதன் உறுப்பினர்களுக்கு எது சிறந்தது என்று கேட்பது கியுபேக்ஸின் கடமை என்று தெரிவித்துள்ளனர். 

தற்போதைய பொருளாதார மந்தநிலையின் கீழ், நிதியை நிர்வகிப்பதில் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுள்ள அரசாங்கத்திற்கு இதுபோன்ற கோரிக்கை அழுத்தம் சேர்க்கும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். 

அரசு ஊழியர்கள் மக்கள் தொகையின் ஒரு பகுதியாகவும், அவர்களின் பணப்புழக்க அளவை உயர்த்துவதும் அதே நேரத்தில் பொருளாதாரத்தின் பிற துறைகளில் செலவினங்களை அதிகரிக்கும் என்று மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அஹ்மத் ஃபௌசி அப்துல் ஹமிட் தெரிவித்துள்ளார். 

பொது மக்கள் அரசாங்கத் துறைகளில் திறமையான சேவையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சில வரி செலுத்துவோரின் நிதியைப் பிரித்து ஆண்டு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க விரும்பவில்லை என்பது மனதைக் குழப்புகிறது.

இது நியாயமானதா என்பது பொருளாதார நிலைமை மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. 

அடிக்கடி ஊக்கத் தொகை கோரிக்கைகளுக்கு இடமளிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கலாம். ஆனால் கியுபேக்ஸ் அரசு ஊழியர்களுக்கு நியாயமானதாகௐ கருதுவதை மட்டுமே கேட்கிறது என்று அவர் கூறினார். 

வியாழக்கிழமை, கியூபேக்ஸ் தலைவர் அட்னான் மாட் அடுத்த மாதம் கொண்டாடப்படும் ஹரிராயா பெருநாளுக்காக அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவி நிதி வழங்குமாறு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset