நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அச்சுறுத்தல்கள் குறித்து காவல்துறை விசாரிக்கும்: ங்கா கோர் மிங்

பெட்டாலிங் ஜெயா:

கடந்த வியாழக்கிழமை ஆயிர் தாவாரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த மிரட்டல் குறிப்புகள் குறித்து காவல்துறை விசாரிக்கும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து காவல்துறையிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மற்ற தலைவர்களுக்கு நடக்காமல் இருக்க முழுமையான விசாரணை நடத்தப்படும் எனத் தாம் நம்புவதாகவும் ங்கா கூறினார்.

இந்தச் சம்பவத்தால் தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் ஒப்புக் கொண்டார். 

குறிப்பாகத், தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்துத் தனது கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.

இது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகி வருகின்றன. 

முன்னதாக, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாமின் வீட்டில் சந்தேகத்திற்கிடமான தீ தாக்குதல் நடந்தது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

நேற்று, ங்காவின் 76 வயதான தாயார் தனது வீட்டின் முன் பல மிரட்டல் குறிப்புகள் சிதறிக் கிடப்பதைக் கண்டு காலை 10.15 மணிக்கு மஞ்ஜோங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் புகார் அளித்தார்

கொள்கைகள் அல்லது அரசியல் கருத்துக்களில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், வேறுபாடுகள் கண்ணியத்தின் எல்லைக்கு அப்பால் சென்று குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நான் இன்று காலை உள்துறை அமைச்சர் சைஃபுடினைச் சந்தித்ததாகவும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset